வெள்ளக்கோவிலில் மழை நீர் தேங்கிய பகுதியில் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு

 

வெள்ளக்கோவில், ஜூன் 7: வெள்ளக்கோவில் நகராட்சி பகுதிகளில் நேற்று மாலை பெய்த கன மழையால் கடைவீதி, வீரக்குமாரசாமி கோவில், தாரபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் வெங்கடேஷ்வரன் உத்தரவின் பேரில் மழை நீர் தேங்கிய இடங்களில் கொட்டும் மழையிலும் நகராட்சி பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நகராட்சி பகுதியில் வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் சாக்கடை பகுதியில் கொட்டி செல்வதால் மழை நீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், சாக்கடை பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என நகராட்சி நிர்வாகம் தராப்பில் தெரிவித்துள்ளனர்.

The post வெள்ளக்கோவிலில் மழை நீர் தேங்கிய பகுதியில் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: