பெங்களூரு பாஜ எம்எல்ஏ பலாத்கார வழக்கில் கைது

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சரும் பாஜ எம்எல்ஏவுமான முனிரத்னம் மீது ரூ.30 லட்சம் கமிஷன் கேட்டதாக பெங்களூரு ஒப்பந்ததாரர் மஞ்சுநாத் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மற்றும் முன்னாள் கவுன்சிலர் வேலுநாயக்கர் சாதி வன்கொடுமை தொடர்பாக கொடுத்துள்ள புகார் தொடர்பாக முனிரத்தினத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ராம்நகரம் மாவட்டம், கக்கலிபுரா போலீஸ் நிலையத்தில் யஷ்வந்தபுரம் பகுதியை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். அதில், ‘முனிரத்னம் தன்னை, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். இந்நிலையில் மற்ற இரு வழக்குகளிலும் ஜாமீன் பெற்ற முனிரத்னா நேற்று காலை சிறையில் இருந்து விடுதலையானார். அப்போது சிறை வாசலில் காத்திருந்த கக்கலிபுரா போலீசார், பாலியல் பலாத்கார வழக்கில் சிறைவாசலில் கைது செய்தனர்.

The post பெங்களூரு பாஜ எம்எல்ஏ பலாத்கார வழக்கில் கைது appeared first on Dinakaran.

Related Stories: