சர்ச்சை குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம் பெங்களூருவில் முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதி

புதுடெல்லி: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோரிபல்யா இந்தியாவிற்குள் இல்லை அது பாகிஸ்தான் என கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்திருந்தார். அவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்திருந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவருமே மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறோம். அதனை நாம் தவிர்த்து விட முடியாது. எனவே அதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் எத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விவகாரத்தில் சர்ச்சையான கருத்துக்களை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஏன் தெரிவித்தார் என்பது குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் பதிவாளர் அவரிடம் கேட்டு அதுதொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post சர்ச்சை குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம் பெங்களூருவில் முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதி appeared first on Dinakaran.

Related Stories: