தென்னிந்திய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், தமிழ்நாட்டில் 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி நிலை காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 7ம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக இன்று மேகமூட்டம் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் கரூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவான அளவில் வெயில் இருந்தது.

The post தென்னிந்திய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: