×

துவரங்குறிச்சி அருகே 6 அடிநீள நாகம் பிடிபட்டது

 

துவரங்குறிச்சி, ஜூன் 3: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த யாகபுரம் பகுதியில் வசிப்பவர் திருப்பதி (40). இவரது வீட்டின் அருகில் மாட்டிற்கு தீவனத்திற்காக வைக்கோல் போர் அமைத்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு நல்ல பாம்பு ஒன்று இரைத்தேடி வைக்கோல் போர் அருகே வந்தது. மேலும் அவர் வளர்த்து வந்த இரண்டு கோழிகளையும் விழுங்கியது.

இதனைக் கண்ட திருப்பதி உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை போராடி பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

The post துவரங்குறிச்சி அருகே 6 அடிநீள நாகம் பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi ,Duvarankurichi ,Tirupati ,Yagapuram ,Trichy district ,Duvarangurichi ,
× RELATED துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம்