×

பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை

 

திருச்சி, ஜூன் 19: ஈதுல் அல்ஹா பக்ரீத் பெருநாள் தொழுகை கஃபூர் பள்ளிவாசல் இதுகாஹ் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூட வெகு விமர்சையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் மாதம் பிறை 10 அன்று பக்ரீத் பெருநாள் கொண்டாடுவதும் அதற்கு முந்தைய நாள் அரஃபா நோன்பு வைப்பது வழக்கம்.

அந்த வகையில் தியாகத் திருநாளான பக்ரீத் பெருநாள் தொழுகை கஃபூர் பள்ளிவாசல் ஈத்காஹ் மைதானத்தில் பள்ளிவாசல் நிர்வாகியான பிரைட் ஜனாப் ஏ.அப்துல் ஹமீத் ஸாஹிப் தலைமையில் மௌலவி ஹாஃபிழ் காரி ஹாஜி எஸ்.முகமது மொய்தீன் அன்வாரி ஹஜ்ரத் தொழுகை நடத்த அவரை பின்தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்று கூட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

The post பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Trichy ,Eid al-Adha ,Eidgah Maidan ,Kafur Masjid ,Eid al-Fitr ,
× RELATED பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில்...