×

துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம்

 

துவரங்குறிச்சி, ஜூன் 2: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம், மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் தீயணைப்பு வாகனம் விபத்து நேரிடும் இடங்களில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் இருந்ததால் தக்க சமயத்தில் செல்ல முடியாததாலும் தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்ததாலும் தீயணைப்பு நிலையம் தற்போது துவரங்குறிச்சி போலீஸ் காலனி அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இனி வரும் தீ விபத்து மற்றும் மற்ற விபத்துகள் ஏற்படும் போது விரைவில் சென்று வர ஏதுவாக இருக்கும்.

மேலும் இதுபோன்று வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் சொந்த இடத்தில் இருந்தால் அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று இப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் குமார், மாவட்ட அலுவலர் ஜெகதீஷ், உதவி மாவட்ட அலுவலர் அலுவலர் லியோ ஜோசப், நிலை அலுவலர் மனோகர், நிலை அலுவலர் நாகேந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

The post துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi Fire Station ,Dwarangurichi ,Trichy District ,Dwarangurichi Fire Station ,
× RELATED குத்தகை காலம் முடிவடைந்தும் ரூ.38.85 கோடி...