×

திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து நகை திருட்டு

 

திருச்சி, ஜூன் 16: திருச்சி தில்லைநகர் 11வது கிராசில் அமைந்துள்ளது ஆலடி கருப்பண்ண சுவாமி கோயில். இந்த ஆலயத்தில் ராஜா என்கிற ராஜ்குமார் என்பவர் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் கோயிலை பூட்டிவிட்டு சென்ற ராஜ்குமார் மீண்டும் மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை கோயிலை திறத்த வந்தார்.

அப்போது கோயிில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ரூ.6000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து. உடனே தில்லைநகர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tiruchi ,Aladi Karupanna Swamy Temple ,11th Cross, Thillanagar, Tiruchi ,Raja ,Rajkumar ,
× RELATED திருச்சி தென்னூர் அண்ணா நகரில் பஸ், கார், டூவீலர் அடுத்தடுத்து மோதல்