×

முசிறி, தொட்டியத்தில் நியாய விலை கடையில் குறைதீர் முகாம்

 

முசிறி, ஜூன் 16: முசிறி அருகே சொரியம்பட்டி நியாய விலை கடையில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்து பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்களை பெற்று அனைத்தையும் தீர்வு கண்டார். சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஜீவா வரவேற்றார்.

பொதுமக்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், செல்போன் எண் மாற்றம் நகல் அட்டை, புதிய குடும்ப அட்டை, அங்கீகாரச் சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 25 மனுக்கள் அளித்தனர். அனைத்து மனுக்களும் உடனடி தீர்வு காணப்பட்டது. முடிவில் விற்பனையாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

இதேபோல் தொட்டியம் வட்டம் மணமேடு நியாய விலை கடையில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு வருவாய் ஆய்வாளர் லட்சுமணன் வரவேற்றார். பொதுமக்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், செல்போன் எண் மாற்றம் நகல் அட்டை, அங்கீகாரச் சான்று புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்வு காணப்பட்டது. முடிவில் விற்பனையாளர் செல்வம் நன்றி கூறினார்.

The post முசிறி, தொட்டியத்தில் நியாய விலை கடையில் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Musiri ,Muchdir ,Soriyampathi ,Fair Price ,Shop ,Musiri Gotatshiar Rajan ,Dinakaran ,
× RELATED முசிறி அருகே 2 பேரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி போலீசில் சரண்