×

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் காப்பர் வயர் திருடிய 2 பேருக்கு வலை

 

திருவெறும்பூர், ஜூன் 19: திருவெறும்பூர் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி கம்பெனியை பூட்டிவிட்டு சென்றார். அன்று இரவு பணியில் வாட்ச்மேனாக ஜாகிர் உசேன் இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் கம்பெனியின் பின்பக்கம் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து ஜாகிர் உசேன் சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத இரண்டு பேர் கம்பெனிக்குள் புகுந்து 30 மீட்டர் காப்பர் ஒயரை திருடியுள்ளனர். ஜாகிர் உசேனை கண்டதும் ஒயருடன் தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ20 ஆயிரம் ஆகும். இது குறித்து நடராஜன் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் காப்பர் வயர் திருடிய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Natarajan ,Netaji Nagar ,Duvakkudi ,
× RELATED திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்...