×

காட்டுப்புத்தூரில் இருந்து சென்னைக்கு பழைய வழித்தடத்தில் சொகுசு பேருந்து துவக்கம்

 

தொட்டியம், ஜூன் 18: திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூர் பெரியார் பேருந்து நிலையத்தில் முசிறி துறையூர் பெரம்பலூர் வழியாக சென்னைக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழிதடத்தில் புதிய பேருந்தை முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்வில் காட்டுப்புத்தூர் பேரூர் செயலாளர் சுப்ரமணியன். ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதா சிவ செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி பெரியண்ணன் (கரூர் மண்டலம்) கரூர் மண்டல துணை மேலாளர் சாமிநாதன், முசிறி கிளை மேலாளர் தண்டபாணி பொறியாளர் மணிவேல் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.

The post காட்டுப்புத்தூரில் இருந்து சென்னைக்கு பழைய வழித்தடத்தில் சொகுசு பேருந்து துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kattuputhur ,Chennai ,Tiniyam ,Trichy District Tiniyam Union ,Kadtuputtur Periyar Bus Station ,Musiri Shatiyur Perambalur ,Musiri ,legislator ,Kaduvetti Thiagarajan ,Kattuputtur ,Dinakaran ,
× RELATED வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால்...