×

திருச்சி அஞ்சல் மண்டல அலுவலகத்தில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்

 

திருச்சி, ஜூன் 19: குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல் தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் முக்கிய விதிகள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு திருச்சி அஞ்சல் மண்டல அலுவலகத்தில் நடந்தது. மாறிவரும் நவீன காலத்தில் அஞ்சல் துறையின் ஊழியர்கள் தங்களைத்தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் வகையில் முக்கிய தலைப்புகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மத்திய அஞ்சல் மண்டலத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல் தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் முக்கிய விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மத்திய அஞ்சல் மண்டல அலுவலகத்தில் அஞ்சல் துறை ஊழியர்களுக்கு நடத்தப்பட்டது. நவீன காலத்தில் குழந்தைகள் தீங்கிழைத்தல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், போக்சோ சட்டம், 2012ன் முக்கிய விதிகள் குறித்து அறியும் வகையில் பயிலரங்கம் நடந்தது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புப்பணிகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஸ்ரீவித்யா பயிலரங்கில், தலைப்பு குறித்து விரிவாக விளக்கினார்.

மண்டல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த பயிலரங்கிற்கு, அஞ்சல் மண்டல தலைவர் நிர்மலாதேவி தலைமை வகித்தார்.  போக்சோ சட்டத்திலுள்ள பல்வேறு விதிகள், குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை இந்த பயிலரங்கம் மூலம் கற்றுக்கொண்டதாக இதில் கலந்து கொண்ட பணியாளர்கள் குறிப்பிட்டனர். நிறைவாக மண்டல அலுவலக உதவி இயக்குநர் (வணிக மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம்) கலைவாணி நன்றி தெரிவித்தார்.

The post திருச்சி அஞ்சல் மண்டல அலுவலகத்தில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் appeared first on Dinakaran.

Tags : Boxo Law ,Trichy ,Post Office ,Awareness ,on ,Trichy Post Office ,Dinakaran ,
× RELATED பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது