ரயில்வே தண்டவாள பணிகள் ஆய்வு

பாலக்காடு: பாலக்காடு மண்டல ரயில்வே அலுவலகத்திற்கு உட்பட்ட வடகரா, மாஹி, தலச்சேரி, கண்ணூர், பய்யணூர், மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே தண்டவாள பணிகளையும், மேம்பால பணிகளையும் ரயில்வே மேலாளர் அருண்குமார் சதுர்வேதி நேரில்ஆய்வு செய்தார். அமிர்த் பாரத் மேம்பாட்டு திட்ட பணிகள் எந்த நிலையில் உள்ளது என பாலக்காடு மண்டல ரயில்வே அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். மேலும், நீலேஸ்வர், காஞ்ஞங்காடு ஆகிய ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். இவருடன் பாலக்காடு மண்டல ரயில்வே உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

ரயில்வே மேம்பாட்டு திட்ட பணிகளை விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் திட்ட பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்குஉத்தவிட்டுள்ளார்.

The post ரயில்வே தண்டவாள பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: