×

முதியவரை தாக்கியவர் கைது

 

திருச்சி, மே 30: திருச்சி தென்னூர் அண்ணா நகர் சிவப்பிரகாசம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் புது மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பீமன் (எ) முருகன்(54), இவரது நண்பர் மகேஷ்(50). இருவரும் கடந்த 27ம் தேதி இரவு மது அருந்தினர். அப்போது எதிரே டேபிளில் அமர்ந்து உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்த நவீன்குமார்(29) மற்றும் நண்பர்கள் 3 பேர் சத்தமாக பேசி கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பதால் மெதுவாக பேசுங்கள் என்று முருகன், மகேஷ் ஆகியோர் கூறினர். இதனால் முருகனை பீர்பாட்டிலால் நவீன்குமார் உட்பட 4 பேரும் தாக்கினர். இதில் தலையில் காயமடைந்த முருகன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து, நவீன்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

The post முதியவரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bheeman (A) Murugan ,Pudu Mariamman Koil Street ,Mahesh ,Tasmac Bar ,Sivaprakasam Road ,Anna Nagar, Tiruchi ,Dinakaran ,
× RELATED ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு