×

ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைகளுக்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் இருக்காது. 15ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமய பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வரும் 19ம் தேதி இரவு வரை மாத பூஜைகள் நடைபெறும்.இந்த நாட்களில் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தலாம். 19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

 

The post ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ani month Puja Sabarimala temple ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan temple ,Ani ,Melasanti ,Mahesh Namboothiri ,Deeparathan ,Tantri Kandararu ,Mahesh Mohanar ,Ani month ,Sabarimala ,temple ,
× RELATED ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்கள் தரிசனம்!