ஜூன் 21ல் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் டவுன் ரதவீதிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

*தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நெல்லை : நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை டவுன் ரதவீதிகளை நேற்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் 13ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி நெல்லை டவுன் ரதவீதிகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோயில் தேர்களை சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்து தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.தேர் செல்வதற்கான பாதை, ரதவீதிகளில் தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறுசிறு குழிகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், டவுன் 4 ரதவீதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். தேரோட்டம் நடைபெறும் ரதவீதிகளில், தேர்கள் திரும்பும் இடங்கள், வாகையடி முனை, லாலாசத்திர முக்கு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு டேப் மூலம் அளவீடுகள் செய்து, தேர்கள் திரும்ப போதிய இட வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் முருகன், சிவகுமார் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

The post ஜூன் 21ல் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் டவுன் ரதவீதிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: