பழுதடைந்த நீர்தேக்க தொட்டியால் பாதிப்பு

பந்தலூர் : பந்தலூர் அட்டி பகுதியில் பழுதடைந்த நீர்தேக்கத்தொட்டியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக நெல்லியாளம் நகராட்சி சார்பில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் இந்த நீர்தேக்கத்தொட்டி நீர்கசிவு ஏற்பட்டு வருவதால் தண்ணீர் தேக்கி வைத்து மக்களுக்கு விநியோகம் செய்ய முடியவில்லை. இதனை சீரமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே பலமுறை இந்த நீர்தேக்க தொட்டி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நீர்தேக்க தொட்டி மேலும் பழுதடைந்து காணப்படுகிறது. நீர்தேக்க தொட்டி அருகே ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால் நீர்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு செய்து பழுதடைந்து காணப்படும் நீர்தேக்க தொட்டியை முற்றிலும் அகற்றி புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழுதடைந்த நீர்தேக்க தொட்டியால் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: