ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் வீடியோ பதிவேற்றம்.. மன உளைச்சலில் எலி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி!!

சென்னை : ஆபாசமாக கேள்வி கேட்டு அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்ததால் மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பெண் யூடியூப் நிகழ்ச்சி தொகுப்பாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றின் பெண் தொகுப்பாளர் காதல் குறித்து சாலையில் செல்லும் இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது அண்ணா நகரில் இளம் பெண் ஒருவரிடம் காதல் பற்றி பேசுமாறு கேட்டு, பிறகு ஆபாசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தன்னுடைய காணொளியை யூடியூபில் பதிவேற்றம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

ஆனால் யூடியூப் சேனலில் அந்த காட்சிகள் சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் பகிர்வு செய்யப்பட்டது. ஆபாச கேள்வி அடங்கிய அந்த காணொளிக்கு கண்டனம் தெரிவித்து பலரும் கமெண்ட் செய்து இருந்தனர். இதனை தோழிகள் மூலமாக அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான 23 வயது இளம்பெண், எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினர். இந்த நிலையில், இது பற்றிய இளம்பெண்ணின் புகாரை அடுத்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கீழ்ப்பாக்கம் காவல்துறையினர், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் யூடியூப் சேனலின் உரிமையாளர் ராம், ஒளிப்பதிவாளர் யோக ராஜ், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்வேதா ஆகியோரை கைது செய்தனர்.

The post ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் வீடியோ பதிவேற்றம்.. மன உளைச்சலில் எலி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி!! appeared first on Dinakaran.

Related Stories: