சென்னிமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் மக்கள் அவதி

ஈரோடு: சென்னிமலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில், அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தல், அடமானம் எழுதுதல், ரத்து செய்தல் போன்ற பணிகளுக்காக தினமும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக சார் பதிவாளர் அலுவலக வளாகத்திற்குள் புதிதாக 3 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

இதில் 2 கழிப்பறைகளை அலுவலக பணியாளர்கள் பயன்பாட்டிற்கு என அதன் கதவில் எழுதி ஒட்டி பூட்டி வைத்துள்ளனர்.‌ மீதமுள்ள மற்றொரு கழிப்பறையின் உள்பக்கத்தில் தாழ்ப்பாள் இல்லாமல் இருப்பதோடு தண்ணீர் வசதியும் கட் செய்யப்பட்டுள்ளதால் அதை பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் மற்றும் வயதானோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இது சம்பந்தமாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மாவட்ட பதிவாளர் இது தொடர்பாக விசாரணை நடத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கழிப்பறைகளை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

The post சென்னிமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: