கனமழை காரணமாக பாலாற்றில் பெருக்கெடுத்தோடும் தண்ணீர்

 

உடுமலை, மே 24: உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் தேவனூர்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியூர் கிராமம் உள்ளது. இதன் அருகில் பாலாறு செல்கிறது. வழக்கமாக, கோடை காலங்களில் பாலாறு வறண்டு காணப்படும். மழைக்காலங்களில் மட்டுமே வெள்ளப்பெருக்கு ஏற்படும்.ஆனால், கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் கோடை மழையின் காரணமாக பாலாற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.

நல்லாற்று தண்ணீரும் கலந்து ஆண்டியூர் வழியாக அர்த்தநாரிபாளையம், நா.மு.சுங்கம் வழியாக ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்து ஆழியாறு ஆற்றில் கலக்கிறது.கோடை காலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும், பாசனத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

The post கனமழை காரணமாக பாலாற்றில் பெருக்கெடுத்தோடும் தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: