நிலக்கோட்டை சக்கையநாயக்கனூரில் சாலையில் செல்லும் கழிவுநீரால் நோய் அபாயம்

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே சக்கையாநாயக்கனூர் கிராமத்தில் ஜல்லிப்பட்டி, கொளிஞ்சிப்பட்டி, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரதான சாலை செல்கிறது. இச்சாலையில் கழிவுநீர் கால்வாய் வசதி கிடையாது.இதனால் அப்பகுதி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கழிவுநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர- நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரையும், குப்பைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நிலக்கோட்டை சக்கையநாயக்கனூரில் சாலையில் செல்லும் கழிவுநீரால் நோய் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: