பள்ளி மாணவி பலாத்காரம் பஸ் கண்டக்டருக்கு 20 ஆண்டு சிறை

தவளக்குப்பம்: புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்2 மாணவி. இவர், கடந்த 2023 பிப்ரவரி 20ம் தேதி சிவராத்திரியன்று திடீரென மாயமானார். பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை நோணாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அந்த மாணவியை ஒருவர் இறக்கி விட்டது தெரிந்தது. இதுபற்றி அறிந்த பெற்றோர் சென்றதும் அந்த மாணவி, பழைய பாலத்தின் மேல் ஏறி, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர்கள் காப்பாற்றினர். அரியாங்குப்பம் போலீசார் விசாரித்ததில் புதுச்சேரியில் இருந்து மடுகரை வரை செல்லும் தனியார் பஸ் கண்டக்டரான கடலூர் மாவட்டம் புதுகடை கீழ்பாதி பகுதியை சேர்ந்த பாபு (29) என்பவர், மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர் ஏற்கனவே 2 மனைவிகளை பிரிந்து வசிப்பவர். இதையடுத்து போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கை புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி விசாரித்த பாபுவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

The post பள்ளி மாணவி பலாத்காரம் பஸ் கண்டக்டருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: