அரியலூரில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், மே 18:அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலைகளை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில், ஓட்டக் கோவில் தனியார் சிமென்ட் ஆலையில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பையால் ஏற்பட்ட காற்று மாசுவைக் கண்டித்தும், சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகளால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்த விபத்துக்களை கண்டித்தும், சிமென்ட் ஆலைகளுக்கென தனிச் சாலை அமைக்க வேண்டும். காலாவதியான சுரங்கங்களை காடுகளாக மாற்றிட வேண்டும்.

அனைத்து கிராம கிராமங்களிலும் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். காற்றின் மாசு அளவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலர் அருணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரவீந்திரன், பொருளாளர் அருண்பாண்டியன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சிற்றம்பலம், சமூக ஆர்வலர்கள் தமிழ்களம் இளவரசன், தங்க.சண்முகசுந்தரம், சங்கர் மற்றும் மாதர் சங்கம் பாக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 

The post அரியலூரில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: