சூறாவளி காற்று, மழையால் 120 ஹெக்டர் வாழை மரம் சேதம்

 

ஈரோடு, மே 17: ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி காற்று, மழையினால் 120 ஹெக்டர் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கலெக்டர் மூலமாக வருவாய்த்துறை ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், அந்தியூர், அம்மாபேட்டை வட்டாரங்களில் கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சூறாவளி காற்று மற்றும் மழையினால் வாழை மரங்கள் விழுந்து சேதமானது.

இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களால் 269 விவசாயிகளின் தோட்டங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சுமார் 120 ஹெக்டர் பரப்பளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், சேதார மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை ஈரோடு மாவட்ட கலெக்டர் மூலமாக வருவாய்த்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

The post சூறாவளி காற்று, மழையால் 120 ஹெக்டர் வாழை மரம் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: