முதல்வரின் திட்டங்களுக்காக மக்கள் அளித்த மகத்தான வெற்றி: நவாஸ்கனி எம்பி பேட்டி

 

ராமநாதபுரம், ஜூன் 5: திமுக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி நவாஸ்கனி செய்தியாளரிடம் கூறும்போது,‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களுக்காக மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றியாகும். இங்கு சாதியையும், மதத்தையும் வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு சரியான பாடம் புகட்டி உள்ளது.

பாசிச பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை சாலையோர ரயில் போக்குவரத்து திட்டம் துவங்கவும், படித்த இளைஞர்கள் பெண்களின் நலனுக்காக வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை அமைக்கவும், ராமேஸ்வரம் ஆன்மீக தேசிய சுற்றுலா தளம் என்பதாலும், ராமநாதபுரம் மாவட்டம் வர்த்தக மாவட்டமாக இருப்பதாலும் விமான போக்குவரத்து துவங்கவும் நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

The post முதல்வரின் திட்டங்களுக்காக மக்கள் அளித்த மகத்தான வெற்றி: நவாஸ்கனி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: