கலைஞர் பிறந்தநாள் விழாவில் பள்ளியில் மரக்கன்று நட்ட அமைச்சர்

இளையான்குடி, ஜூன் 5: இளையான்குடி வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு புக்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, மானாமதுரை சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் சிவனேசன், கிளை செயலாளர் முத்துராமலிங்கம், கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் முருகேசன், நீலமேகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாள் விழாவில் பள்ளியில் மரக்கன்று நட்ட அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: