தேவகோட்டை அருகே வாலிபரை கொன்று புதைத்த இரண்டு நண்பர்கள் கைது

தேவகோட்டை, மே 15: தேவகோட்டை ஜீவா நகரை சேர்ந்த சேதுராஜ் மகன் பாண்டியராஜன்(38). இவரது நண்பர் பூங்குடியேந்தலை சேர்ந்த செல்வகுமார். கடந்த மார்ச் மாதம் இவர்கள் இருவரும், மேலும் நான்கு பேருடன் வேனில் தேவகோட்டை சிறுவாச்சி அருகே முத்து நாட்டு கண்மாய் பகுதியில் மது அருந்தினர். இதில் பாண்டியராஜுடன் தகராறு ஏற்பட்டது. இதில் 5 பேரும் சேர்ந்து பாண்டியராஜனை கொலை செய்து விட்டு கண்மாயில் புதைத்து விட்டு தேவகோட்டை வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார், டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் விசாரணையை தீவிர படுத்தினர். நேற்று முன்தினம் கொலையாளிகளில் செல்வகுமார், சின்னக் கோடகுடியைச் சேர்ந்த ராஜா ஆகிய இருவரும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை பாண்டியராஜன் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று அழைத்து சென்றனர்.

தேவகோட்டை தாசில்தார் அசோக்குமார் தலைமையில் டிஎஸ்பி பார்த்திபன் கைரேகை தடயவியல் நிபுணர் சிவதுரை முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தனர். உடல அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post தேவகோட்டை அருகே வாலிபரை கொன்று புதைத்த இரண்டு நண்பர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: