திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வபெருந்தகை கடிதம்

சென்னை:  திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க வேண்டும் என முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கடிதம் அனுப்பியுள்ளார். திருச்சி பிரபா தியேட்டர் அருகே 2011-ல் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டு 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. ரசிகர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சிலையை தற்போதுள்ள இடத்தில் திறக்க அனுமதிக்க முடியாது என அரசு ஐகோர்ட்டில் பதிலளித்திருந்தது. சிவாஜி சிலையை திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நிறுவி திறக்கக் கோரி முதல்வருக்கு செல்வபெருந்தகை கடிதம் அனுப்பியுள்ளார்.

The post திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வபெருந்தகை கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: