திருப்புவனம் பகுதி அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

திருப்புவனம், மே 11: சிவகங்கை மாவட்ட மாணவர்கள் தேர்ச்சி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பெற்றதைப் போலவே 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 97.02சதவீதம் தேர்ச்சி பெற்று 2ம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் திருப்புவனம் தாலூகாவில் கிராமப்புறங்களில் 11 அரசு உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன. அல்லிநகரம் உயர் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 75 மாணவ, மாணவியரில் 75 பேரும் தேர்ச்சி, கலியாந்தூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தேர்வுவெழுதிய 14 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 308 மாணவிகளில் 304 பேர் தேர்ச்சி அடைந்தனர். திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளியில் 122 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கீழடி அரசுப் பள்ளியில் 56 மாணவர்களில் 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பாச்சேத்தி அரசுப்பள்ளியில் 97 மணவர்களில் 90 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பழையனூர் அரசு பள்ளியில் 106 பேரில் 100 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். லாடனேந்தல் அரசுப்பள்ளியில் தேர்வு எழுதிய 58 மாணவர்களில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பூவந்தி அரசுபள்ளியில் 52 பேர் தேர்வு எழுதியவர்களில் 51 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மணலூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 23 மாணவர்களில் 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இலந்தைக்குளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 29 பேரில் 25 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருப்புவனம் பகுதி அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: