வாகன பரிசோதனையில் ரூ.65 லட்சம் பறிமுதல்

சிவகங்கை, மே 11: தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.19ல் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகளில் வாகன பரிசோதனையே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் ஆவணங்கள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.50ஆயிரத்திற்கு கூடுதலாக இருந்த சிவகங்கை சிவன்கோவில் அருகே ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.13லட்சம், சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் அலவாக்கோட்டை அருகே பறிமுதல் செய்த ரூ.10லட்சம், சிவகங்கை அருகே சிலந்தகுடி, சக்கந்தி விலக்கு மற்றும் மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் மார்ச் 16ல் இருந்து ஏப்.19 வாக்குப்பதிவு வரை ரூ.65 லட்சத்து 91ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.இதில் ரூ.54லட்சத்து 2ஆயிரம் உரிய ஆவணங்கள் அளித்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post வாகன பரிசோதனையில் ரூ.65 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: