மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி மீண்டும் தொடக்கம்

மார்த்தாண்டம், மே 11 : மார்த்தாண்டத்தில் நிறுத்தப்பட்ட மேம்பால சீரமைப்பு பணி மீண்டும் தொடங்கியது. மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை சீரமைப்பதற்காக குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தை தொட்டு மேம்பாலம் தொடங்கி பம்மம் வரை 2.5 கி.மி தூரம் அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் சுமார் 2 அடி விட்டத்தில் திடீரென மேம்பாலத்தின் நடுப்பகுதி உடைந்தது. இதனால் மேம்பாலம் வழியாக போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. லாரிகள் பயணம், திக்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டது. பஸ்கல் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக விடப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து நெருக்கடி நேற்றும் தொடர்ந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சேதமடைந்த பால பகுதியை பார்வையிட்டு பாலம் சேதம் அடைந்ததில் சதி நடந்து உள்ளது என்றும் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதோடு பால சீரமைப்பு பணிகளை நிறுத்தினார். தொடர்ந்து அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மேம்பாலத்தில் பழுதடைந்த பகுதியில் மூன்றாவது நாளாக நேற்றும் சீரமைப்பு பணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இந்த பகுதியில் எளிதில் உலரக்கூடிய, அதாவது இறுக கூடிய வேதியியல் கலவை கான்கிரீட் உடன் சேர்க்கப்பட்டு தகடு ஜாக்கி மூலம் உயர்த்தப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. மீண்டும் கான்கிரீட் போடப்பட்டது. ஒரு சில நாள்களில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: