தாரமங்கலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மல்லிக்குட்டை கிராமம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50). இவரது மகன் சந்தோஷ் (12). 6ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த வகுப்பு நண்பர்களான சுதர்சன் (12), ரித்தீஷ் (12) மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் மித்ரன் (9) ஆகிய 4 பேரும், நேற்று மதியம் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள மல்லிக்குட்டை ஏரிக்கு சென்று காலை கடனை முடித்து விட்டு, வீட்டிற்குச்செல்ல முடிவு செய்தனர். அப்போது சுதர்சன், சந்தோஷ் இருவரும் ஏரியில், கால் கழுவிக்கொண்டு செல்லலாம் எனக்கூறி அங்கு சென்றனர். தண்ணீரில் இறங்கிய இருவரும் சேற்றில் சிக்கி மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
The post ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.