அட்சய திரிதியை நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது

சென்னை: அட்சய திரிதியை நெருங்கி வரும் நேரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. இப்படியே உயர்ந்து மார்ச் 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 1ம் தேதி தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.6,635க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.53,080க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குள் மறுநாளே தங்கம் விலை அதிகரித்தது.

அதாவது நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,715க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,720க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடி சரிவை கண்டிருந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு வரும் 10ம் தேதி அட்சயதிரிதியைக்கு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post அட்சய திரிதியை நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: