சென்னை: சைக்கிள், இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்புதுறையிடம் உரிமம் பெற்று இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
