ஹிஞ்சிலியில் 6வது முறையாக நவீன் பட்நாயக் மனுதாக்கல்

பெர்ஹாம்பூர்: ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்க உள்ளது. இந்நிலையில், அம்மாநில முதல்வரும் ஆளும் பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஹிஞ்சிலி சட்டப்பேரவை தொகுதியில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவரது நெருங்கிய உதவியாளர் வி.கே.பாண்டியன் மற்றும் அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

பட்நாயக் 2000ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை ஹிஞ்சிலி தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்வராக இருந்து வருகிறார். அஸ்கா மக்களவை தொகுதியின் கீழ் வரும் ஹிஞ்சிலியில் வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறும். ஹிஞ்சிலி தவிர போலங்கிர் மாவட்டத்தில் உள்ள காந்தபாஞ்சி தொகுதியிலும் பட்நாயக் போட்டியிடுகிறார்.

The post ஹிஞ்சிலியில் 6வது முறையாக நவீன் பட்நாயக் மனுதாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: