தங்கம் விலையில் மேலும் மாற்றம் சவரன் விலை 2 நாட்களில் ரூ.480 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 19ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.55,120க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிபட்சமாகும். ஜெட் வேக விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1160 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,600க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மறுநாளே மீண்டும் விலை அதிகரித்தது.

24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,840க்கு விற்கப்பட்டது. 25ம் தேதி தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் காணப்பட்டது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,040க்கும் விற்கப்பட்டது. அதே ேநரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோரை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது.

The post தங்கம் விலையில் மேலும் மாற்றம் சவரன் விலை 2 நாட்களில் ரூ.480 உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: