ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்: வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேச்சு

திருவனந்தபுரம்: ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேசினார். அப்போது, 1989க்குப் பின் நேரு குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராக வரவில்லை. 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலைவாய்ப்பு பெரும் சிக்கலாக மாறி உள்ளது. 2 கோடி வேலைவாய்ப்பு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் என்ற மோடியின் பேச்சு என்னவானது? என்று கேள்வி எழுப்பினார். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு மோடி என்ன தீர்வை ஏற்படுத்தினார்? எனவும் சாடினார். ஊழல் செய்தவர்கள் பிரதமர் மோடியை ஆதரித்தால் சுத்தமானவர்கள் போல் மாறிவிடுகின்றனர் என விமர்சனம் செய்தார்.

The post ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்: வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: