இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல்

டெல்லி: இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது என டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல் தெரிவித்துள்ளது. wabeta info என்பது வாட்ஸ் ஆப் மேற்கொண்டுள்ள மேம்பாட்டு ஆய்வுகள் பற்றி தகவல்களை தெரிவிக்கும் அமைப்பாகும். புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டால் நெட் இல்லாமலே வீடியோ, படங்கள், தகவல்களை அனுப்ப முடியும்.

புதிய வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் ஆய்வை தயார்படுத்தி உள்ளதாக wabeta info தெரிவித்துள்ளது. புதிய வழியை பயன்படுத்தி தகவல் அனுப்பும்போதும் பெறும் போதும் ஸ்மார்ட்போனிலும் குறிப்பிட்ட அந்த ஆப்-இருக்க வேண்டும். share it போன்ற செயலியைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்புவது போல, புதிய வாட்ஸ் வசதியும் செய்யப்படும் wabeta info விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இந்த அம்சம் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று WhatsApp அறிவிக்கவில்லை, ஆனால் இது ஏற்கனவே பீட்டா சோதனையில் இருப்பதால், இது விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த புதிய அம்சம் உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு கோப்பு பகிர்வை மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. WhatsApp பயனர்கள் அடிக்கடி பல்வேறு வகையான மீடியா கோப்புகள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்வதால், இந்த புதிய அம்சம் பயன்பாட்டிற்கு ஒரு பயனுள்ள கூடுதலாக இருக்கும்.

The post இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: