பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வெறுப்பை பரப்பும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை வாய்திறக்காதது ஏன்?. ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியது வெட்கக் கேடானது. பிரதமர் மோடியின் செயல் வெட்கக் கேடானது. வெறுப்புணர்வை தூண்டும் மோடியின் பேச்சு தேர்தல் நடத்தை விதியை மீறும் செயல். வெறுப்புணர்வுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது. கடும் நடவடிக்கையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட வேண்டும். இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை வாய்திறக்காதது ஏன்? : சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்வீட் appeared first on Dinakaran.