‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை மேம்படுத்த உதவும் நாய்கள்.. ஸ்பெயினில் வினோத சிகிச்சை!!

ஸ்பெயினில் உள்ள மருத்துவமனை ஒன்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ள நோயாளிகளின் மனநலனை மேம்படுத்த நாய்களைப் பணியில் ஈடுபடுத்துகிறது. பார்சிலோனா நகரில் இருக்கும் ‘டெல் மார்’ மருத்துவமனை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்கும் நோயாளிகளைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நாய்கள் வாரந்தோறும் இருமுறை நேரில் சென்று பார்க்கும். ஒவ்வொரு முறையும் நாய்கள் 15-20 நிமிடங்களுக்கு நோயாளிகளைக் ‘கவனித்துக்கொள்ளும்’.நாய்கள் காட்டும் பாசத்தின் மூலம் நோயாளிகளுக்கு மனத்தளவில் புத்துயிர் தருவது இம்முயற்சியின் நோக்கமாகும்.இந்த மாறுபட்ட சிகிச்சைக்கு முன்பும் பின்பும் நோயாளிகளின் உமிழ்நீர்ச் சோதனைக்காக சேகரிக்கப்படும். அதைக் கொண்டு அவர்களின் மனநலன் மேம்பட்டுள்ளதா என்பதை மருத்துவர்கள் அறிந்து கொள்வர்.

The post ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை மேம்படுத்த உதவும் நாய்கள்.. ஸ்பெயினில் வினோத சிகிச்சை!! appeared first on Dinakaran.

Related Stories: