கேரளாவில் மின்னணு இயந்திர பிரச்னை ராஜாவின் ஆன்மா இவிஎம்மில் இருக்கிறது: காங்கிரஸ் விளாசல்

புதுடெல்லி: கேரளாவில் மின்னணு எந்திர பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது. அதில்,’ ராஜாவின் ஆன்மா இவிஎம்மில் இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பதிவு: இவிஎம்மில் உள்ள பட்டனை யார் அழுத்தினாலும் அந்த வாக்கு பாஜவுக்குத்தான் போகும். இந்த விவகாரம் கேரளாவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனாலேயே சொல்கிறோம், ராஜாவின் ஆன்மா இவிஎம்மில் இருக்கிறது. எனவே தான் நாங்கள் கீழ்கண்ட கோரிக்கையை வைக்கிறோம்.

* விவிபேட் சீட்டுகளை வாக்காளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

* வாக்காளர்கள் அந்த விவிபிஏடி சீட்டுகளை தனி பெட்டியில் வைக்க வேண்டும்.

* பின்னர் அந்த விவிபேட் சீட்டுகள் 100% எண்ணப்பட வேண்டும். இப்பிரச்னைகள் தொடர்பாக தேர்தல் கமிஷனை சந்திக்க பலமுறை கால அவகாசம் கோரியும், தேர்தல் கமிஷன் இதுகுறித்து பேச தயாராக இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

The post கேரளாவில் மின்னணு இயந்திர பிரச்னை ராஜாவின் ஆன்மா இவிஎம்மில் இருக்கிறது: காங்கிரஸ் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: