புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரி: புதுவையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் 2 அரசு செவிலியர் கல்லூரி, 8 தனியார் செவிலியர் கல்லூரி என மொத்தம் 10 கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடாக 450க்கும் மேற்பட்ட பிஎஸ்சி நர்சிங் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் என்ற அமைப்பு மூலம் கவுன்சிலங் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.

தனியார் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அக்கல்லூரிகளே நேரடியாக நிரப்பி வந்தன. இந்நிலையில் நாடு முழுவதும் 2023-24ம் கல்வி ஆண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என இந்திய நர்சிங் கவுன்சில் அறிவித்தது.  புதுவை மாணவர்களின் கோரிக்கை ஏற்று நர்சிங் கவுன்சில் கடந்தாண்டு மட்டும் பொது நுழைவுத்தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு அளித்தது.

இந்நிலையில் புதுவையில் 2024-25ம் கல்வி ஆண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்து உள்ளார்.

The post புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: