பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018ல் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்ககோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவிகள், விசாகா குழுவில் புகார் அளித்துள்ளார்களா என்று விளக்கமளிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதனை பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாகா குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் மாணவிகளின் புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? என்று கேட்டனர். மேலும் 6 ஆண்டுகள் கடந்தும் மாணவிகளின் புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? என்று கூறி ஜூன் 7க்குள் விளக்கமளிக்க கல்லூரி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: