கொய்யா சட்னி

தேவையான பொருட்கள் :

கொய்யா பொடியாக நறுக்கியது – 250 கிராம்
இஞ்சி நறுக்கியது – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் நறுக்கியது – 2 டீஸ்பூன்
உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் கொய்யா, மல்லி இலைகள், சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை பாத்திரத்தில் மாற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி, தோசை இட்லியுடன் வைத்து சாப்பிட்டு பாருங்க. மற்ற சட்னியை எல்லாம் மறந்து விடுவீர்கள். அந்த அளவிற்கு சுவையானதாக இருக்கும். குழந்தைகளுக்கு துவர்ப்பு சுவை பற்றி சொல்லவும், சுவைத்து பார்க்க கொடுக்கவும் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். இந்த சட்னி கொய்யாவின் இயற்கையான துவர்ப்பு சுவையுடன், உவர்ப்பு, காரத்துடன் சுவையாக இருக்கும்.

The post கொய்யா சட்னி appeared first on Dinakaran.