பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மைக்ரோ பிளாக்கிங் தளமான X தளம் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக X தளம் கடந்த பிப்ரவரியில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இதையடுத்து, தடையை நீண்ட காலத்திற்கு தொடர பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான X சமூக ஊடகத்திற்கு முழுமையான தடை விதித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு வகுத்துள்ள விதிகளை பின்பற்றத் தவறியதாகக் கூறி, எக்ஸ் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியது.

மேலும் தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த 2 மாதமாக அந்நாட்டில் எக்ஸ் சேவையில் பல்வேறு தடங்கல் இருந்த நிலையில், தடை விதித்திருப்பதை நீதிமன்றத்தில் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அரசின் உத்தரவுக்கு இணங்க பல்வேறு கணக்குகள்/ பதிவுகளை எக்ஸ் தளம் முடக்காததால், தடை விதிக்கப்பட்டிருப்பதாக கருத்துரிமை அமைப்புகள் கூறியுள்ளன. இவ்விவகாரத்தில் உள்துறை செயலாளர் உரிய விளக்கம் அளிக்காவிடில், பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: