ஹேமமாலினி குறித்து பேசிய காங்.கின் சுர்ஜேவாலாவுக்கு 48 மணி நேர பிரசார தடை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா, பாஜ எம்பியும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து சர்ச்சை கருத்து கூறுவதாக வீடியோ ஒன்றை பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா சமீபத்தில் டிவிட்டரில் வெளியிட்டார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விடுத்த அறிக்கையில், ‘சுர்ஜேவாலா அளித்த விளக்கத்தையும், சம்மந்தப்பட்ட வீடியோ ஆதாரத்தையும் கவனமாக ஆய்வு செய்ததில், தேர்தல் விதிமீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே அரசியல் சாசன சட்டப்பிரிவு 324ன் கீழ் அவர் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 16ம் தேதி (நேற்று) மாலை 6 மணி முதல் இந்த தடை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஹேமமாலினி குறித்து பேசிய காங்.கின் சுர்ஜேவாலாவுக்கு 48 மணி நேர பிரசார தடை appeared first on Dinakaran.

Related Stories: