தேர்தல் அலுவலர்கள் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தம்

சிவகங்கை, ஏப். 17: மக்களவைத் தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (ஏப். 19) நடைபெற உள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கான பணிகளை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு முடிந்த பிறகு அவற்றை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வாகனங்களை தேர்தல் அலுவலர்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலும், வாக்குப்பதிவு பணிகளை பார்வையிடும் வகையிலும் அவர்கள் செல்லும் வாகனங்களில் (கார்) ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு பணிகளை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ள தலா 30 வாகனங்கள் வீதம் மொத்தம் 120 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த வாகனங்களை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு வாகனத்திலும் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

The post தேர்தல் அலுவலர்கள் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: