பென்ஷன் வாங்கி தருவதாக 70ஐ ஏமாற்றிய 60க்கு வலை

 

மதுரை, ஏப்.17: மதுரை மாவட்டம் குமாரம் அடுத்த மணியாட்சி, கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகம்மாள்(70). இவர், பேரன்களுக்கு புத்தாடைகள் எடுக்க, நேற்று முன்தினம் மதியம் மதுரை, தெற்குவெளி வீதிக்கு வந்தார். துணி எடுத்துவிட்டு ஊருக்கு செல்ல பெரியார் பஸ் நிலையம் வந்து பேருந்தில் ஏறி உட்கார்ந்திருந்தார். அப்போது, நாகம்மாளின் அருகில் வந்து அமர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர், அவரிடம் பேச்சு கொடுத்து முதியோர் ஓய்வூதியம் வருகிறதா என கேட்டுள்ளார்.

அதற்கு, நாகம்மாள் தனக்கு வரவில்லை எனக்கூறினார். இதையடுத்து, ஓய்வூதியம் வாங்கி தருவதாக கூறி பஸ்சிலிருந்து கீழே இறக்கியுள்ளார். பின்னர், அவரை அருகில் உள்ள ஸ்டூடியோவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து, நாகம்மாளிடம் கழுத்தில் செயின் அணிந்திருந்தால் ஓய்வூதியம் கிடைக்காது, செயினை கழற்றி கைப்பைக்குள் வைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்பின், நாகம்மாளை அழைத்து சென்று போட்டோ எடுத்துவிட்டு, அவரிடம் ஜெராக்ஸ் எடுக்ககோரி ஒரு விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். அந்த விண்ணப்பத்தை நாகம்மாள் ஜெராக்ஸ் எடுத்து கொண்டிருந்தபோது, அவரின் கைப்பையை முதியவர் அபேஸ் செய்து கொண்டு தப்பிவிட்டார்.திருடுபோன கைப்பையில் செயினுடன் சேர்த்து, ரூ.2 ஆயிரம் ரொக்கமும் இருந்துள்ளது. திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post பென்ஷன் வாங்கி தருவதாக 70ஐ ஏமாற்றிய 60க்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: