மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட் ரூ.34 லட்சம் கோடியானது: எஸ்.பி.ஐ. நடத்திய ஆய்வில் தகவல்

டெல்லி: நாட்டில் மூத்த குடிமக்கள் மட்டுமே வங்கிகளில் ரூ.34 லட்சம் கோடி வைப்புத் தொகையை வைத்துள்ளதாக எஸ்.பி.ஐ. நடத்திய ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்.பி.ஐ. அறிக்கையில் கூறியதாவது; நாட்டில் மூத்த குடிமக்கள் மட்டுமே வங்கிகளில் ரூ.34 லட்சம் கோடி வைப்புத் தொகையை வைத்துள்ளதாகவும், வங்கிகளில் உள்ள குறித்த கால வைப்புத் தொகையில் மூத்த குடிமக்களின் பங்கு 30%ஆக கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ல் 4.1 கோடியாக இருந்த மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2023-ல் 7.4 கோடியாக அதிகரித்துள்ளது. 2018-ல் மூத்த குடிமக்கள் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.13,72,400 கோடி டெபாசிட் 5 ஆண்டுகளில் ரூ.34,34,700-யாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் மூத்த குடிமக்களின் வங்கி டெபாசிட் தொகை 150% உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களின் 7.4 கோடி வங்கி கணக்குகளில் தலா ரூ.15 லட்சத்துக்கு மேல் வைப்புத்தொகை கொண்டவை 7.3 கோடி சம்பாதித்துள்ளனர். மேலும், முதியோர் டெபாசிட்டுக்கு 7.5% வட்டி கணக்கிட்டால் கூட ஆண்டுக்கு அவர்கள் ரூ.2.6 லட்சம் கோடியை வருவாயாக பெற்றிருப்பார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

The post மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட் ரூ.34 லட்சம் கோடியானது: எஸ்.பி.ஐ. நடத்திய ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: