அனைத்து கட்சியினர் வாக்கு சேகரிப்பு தீவிரம் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர்

அரியலூர், ஏப்.16:அரியலூர் மாவட்டகலெக்டர்அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலர்களை கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நேற்று நடைபெற்றது.நிகழ்வில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் ஜன்மேஜெயா கைலாஷ் மற்றும் அரியலூர் மாவட்ட எஸ்பி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணியில் ஈடுப்படவுள்ள காவலர்களை கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

மேலும், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 199 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 306 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் 199 காவலர்களும், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 160 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 290 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் 160 காவலர்களும் என மொத்தம் 359 காவலர்களுக்கு கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று சட்ட ஒழுங்கை பராமரித்தல், வாக்குச்சாவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமூகமான முறையில் தேர்தல் நடைபெறும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.

மேலும் தேவைப்படும் இடங்களில் பெண் காவலர்களும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட தகவலியல் மைய அலுவலர் ஜான் பிரிட்டோ மற்றும் காவல்துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.

The post அனைத்து கட்சியினர் வாக்கு சேகரிப்பு தீவிரம் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் appeared first on Dinakaran.

Related Stories: